
அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மாதங்களில் ஊரடங்கு தளர்ந்து கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும்,படப்பிடிப்புகள் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கினாலும், திரையரங்குகள் முற்றிலும் திறக்கப்படுவது கூடுதலாக இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்கிறார்கள்.
இந்நிலையில் அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாரானால் கூட அப்படம் ஓடிடியில் தான் வெளியாகும் என்றும், மேலும், போனிகபூர் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களும் ஓடிடி தளத்திலேயே வெளியாகப் போவதாகவும் சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து தயாரிப்பாளர் போனிகபூர் கூறுகையில், நான் தயாரித்து வரும் ’வலிமை’, ‘மைதான்’ மற்றும் ’வக்கீல் சாஹிப்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பில்லை .இந்த மூன்று திரைப்படங்களும் முதலில் தியேட்டர்களில் தான் வெளியாகும்.இதையடுத்தே மற்ற ஓடிடி பிளாட்பாரங்களில்வெளியாகும் .
என்னுடைய 40 ஆண்டுகால தயாரிப்பு அனுபவத்தில் நான் இது மாதிரி பல பிரச்சினைகளை சந்தித்து இருக்கிறேன் அதே நேரத்தில் ஓடிடியில் ரிலீஸ் செய்யும் படத்தயாரிப்பாளர்களுக்கு நான் ஆதரவு அளித்துள்ளேன். இந்த நேரத்தில் அவர்களுக்கு வேறு வழி இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளேன். மூன்று திரைப்படங்களும் முதலில் திரை அரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அதன் பின்னரே மற்ற பிளாட்பாரங்களில் ரிலீஸாகும் என்கிறார்.












