தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்போலீசாரால்,தாக்கப்பட்டதாக கூறப்படும் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்விவகாரத்தில் பொதுமக்கள் ,அரசியல் கட்சி பிரமுகர்கள்,திரையுலக பிரபலங்கள் என பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் சம்பந்தப்பட்ட போலீசார் அனைவரையும் கைது செய்து சட்டப்படி தண்டிக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.காலம் தாழ்ந்த அறிக்கை என்றாலும் ரஜினியின் வார்த்தைகளில் சத்தியம் இருக்கிறது. அது மத்திய அரசினை எழுப்பிவிடும் ,உறக்கம் களையும் என்று நம்பலாம்.
தமிழக அரசு இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டரில், “தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. சத்தியமா விடவே கூடாது”.என்று பதிவிட்டுள்ளார்.