விரக்தி வேதனை எந்த அளவுக்கு சென்றிருந்தால் தற்கொலை பற்றிய முடிவினை சுஷாந்த் சிங் எடுத்திருக்க முடியும்? அந்த அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது சல்மான்கான் குரூப்.
சுஷாந்த் சிங் நடித்துள்ள ‘தில் பச்சாரே ‘படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.சஞ்சனா சங்கி என்கிற நடிகை இணையாக நடித்திருக்கிறார்.
. இவர் டெல்லியை சேர்ந்தவர். கொரோனா லாக்டவுன் காரணமாக டெல்லியில் இருந்து சமீபத்தில் மும்பை வந்தார்.
சுஷாந்த் சிங் மறைவினால் உடைந்து போயிருந்த அவர், பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் சுஷாந்த் சிங் பற்றி தனக்குத் தெரிந்த தகவல்களை கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குமூலமாக அளித்தார்.
பின்னர் நேற்று டெல்லி திரும்பினார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில், “இனி மும்பை திரும்பவே மாட்டேன் என்பது போல, புதிரான பதிவை வெளியிட்டுள்ளார்.
“குட்பை மும்பை. நான்கு மாதங்களுக்குப் பிறகு மும்பை வந்தேன். இப்போது டெல்லி திரும்புகிறேன். உங்கள் (மும்பை) சாலைகள் வித்தியாசமாக இருந்தன. அவை வாகனங்கள் இன்றி வெறிச்சோடி இருந்தன. ஒருவேளை என் மனதில் இருக்கும் வேதனை, எனது பார்வையை மாற்றி இருக்கலாம். அல்லது நீங்களும் வேதனைகளில் இருக்கலாம். மீண்டும் சந்திப்போம்? விரைவில். அல்லது சந்திக்காமலும் இருக்கலாம்'” என்று கூறியுள்ளார்
.இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவரை யாரேனும் மிரட்டி இருப்பார்களோ?












