மதயானை கூட்டம் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கியவர் நடிகர் கதிர்.
கிருமி,என்னோடு விளையாடு,விக்ரம் வேதா,பரியேறும் பெருமாள்,சிகை,பிகில் உள்பட பல படங்களில் நடித்துள்ள கதிர் தற்போது ‘ஜடா’ படத்தில் நடித்து வருகிறார்.
, நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா – அம்மாவின்புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில், “இருவரது வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் கனவும், ஆசையும் தான் இன்றைக்கு நான் இருக்கும் இடம். 53 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு ‘மாஸ்டரினால்’ நிறைவேறியது. அது மிகவும் சிறிய வேடம் தான். அவருடைய வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா.” என்று குறிப்பிட்டுள்ளார்.