
நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், என பல படங்களில், பல அவதாரங்களை எடுத்து வந்தவர் ராதாரவி,
அறிமுக இயக்குனர் மதிவாணன் இயக்கத்தில் “நித்யானந்தா” என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்துக்காக தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்துள்ள இந்த படத்தில் நடிகர் ராதாரவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சர்ச்சை சாமியார் நித்யானநந்தாவின் பெயரை இப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் சில நடிகைகள் கடுமையான வெறுப்பில் இருக்கிறார்கள் என்கிறது கோலிவுட் வட்டா ரம்.
கே.ஆர்.விஜயாவின் சகோதரி மகள் நித்தியானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவர். இவரைப் போல இன்னும் சிலரும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்தவர்கள் .அவர்கள் எல்லோரும் ராதாரவியின் பேரில் காட்டமாக இருக்கிறார்களாம்.
ஆனால் இப்படத்திற்காக தலையில் தலைப்பாகையுடன் மிகவும் ஸ்டைலாக கருப்பு கண்ணாடி அணிந்து நெற்றியில் பட்டையுடன் நாமத்துடன் சிரித்த முகத்துடன் பார்க்கவே வித்தியாசமாக காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.
இந்த படத்தின் போஸ்டரை நடன இயக்குனரும் நடிகருமான சாண்டி, நடிகர் நடராஜ் உட்பட பல திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களின் மூலம் வெளியிட்டுள்ளனர்.












