கமல்ஹாசனுடன் நடிப்பதற்கு வெறியுடன் காத்திருப்பதாக சொல்கிறார் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
உலக நாயகன் கமல் ஹாசன் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி தானே நாயகனாக நடிக்கும் அரசியல் திரைப்படம்,’தலைவன் இருக்கின்றான்’.தேவர் மகனின் இரண்டாம் பாகம் என சொல்லப்படுகிறது
இப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்துடன், தயாரிப்பாளர் சுபாஷ்கரனின் லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில், நாசரின் மகனாக விஜயசேதுபதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விஜய் சேதுபதி, தற்போது வரை கமலுடன் தான் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது,
“நான் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருந்தேன், ஆனால் தேதிகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நான் அதைத் தவறவிட்டேன்,இப்போது வரை நான் அவருடன் எந்தப் படமும் நடிக்கவில்லை, ஆனால் அவருடன் நடிக்க வேண்டும் என்று நான் வெறித்தனமாக விரும்புகிறேன், அது படத்தில் ஒன்று அல்லது இரண்டு காட்சிகள் என்றாலும் கூட பரவாயில்லை.அது எப்போதாவதோ அல்லது மற்றொரு படத்திலோ நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் உண்மையிலேயே ஏதாவது ஒன்றை விரும்பினால், அது எப்படியாவது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.”. இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தெனாலி படத்திற்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் ஏஆர் ரஹ்மானும் கமல்ஹாசனும் இந்த படத்தின் மூலம் இணையவுள்ளனர்.