அவரே வாய்ப்புகள் இல்லாமல் விட்டத்தை பார்த்து மல்லாந்து கிடக்கிறார் ,அவரிடம் சென்று “நீங்கள் முன்னைப்போல ஏன் சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இல்லை ,நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் முட்டி மோதி முழிகள் பிதுங்குகின்றன ,அவைகளை கண்டு கொள்ளாமல் இருக்கலாமா என்று ஓவியாவைப் பார்த்துக் கேட்பது நியாயமா?
அவரென்ன சமூக சேவகியா ,அரசியல் புள்ளியா?
“ரொம்பநாளா டிவிட்டர் பக்கமே வரவில்லையே ,சமூக அவலங்களுக்கு எதிராக நீங்கள் குரல் உயர்த்தி முன்னெடுத்து செல்ல வேண்டாமா?” என்று ஒருவர் உணர்ச்சி வயப்பட்டு பொங்கிவிட்டார்.
ஓவியா ஆர்மியை சேர்ந்தவர் போல.!
பதில் சொல்லாமால் இருக்கலாமா? ஓவியாவும் ரொம்பவும் கிளர்ச்சியுறாமல் “அத்தகைய சமூக குற்றவாளிகளை சிதைப்பதற்கு உரிய அதிகாரம் இல்லாமல் குரல் விடமாட்டேன். நிஜ வாழ்க்கையில் நான் நடிக்கவிரும்பவில்லை” என்று போட்டாரே ஒரு போடு.!
அப்படியானால் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்கிற சினிமாக்காரர்கள் எல்லாம் நடிக்கத்தான் செய்கிறார்களா?
“உங்களது அடுத்த ரிலீஸ் படமா ,கல்யாணமா?”இன்னொரு அன்பரின் கேள்வி.
“தற்போது என்னுடைய லிஸ்ட்டில் கல்யாணம் என்பதே இல்லையே!” என்று சொல்லியிருக்கிறார்.
“டிவிட்டரில் நீங்கள் யாரையாவது ஃ பாலோ பண்ணுகிறீர்களா?”
“மற்றவர்கள் வாழ்க்கையைப்பற்றி எனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை!”-இது ஓவியாவின் பதில் இதிலும் உள்குத்து !