இந்த மாஸ்டர் பொண்ணு எல்லோரையும் அசத்தி அம்மியில் வைத்து அரைத்து விடும் போலிருக்கிறதே.!
இந்த பொண்ணுக்கு கவர்ச்சி இருட்டுக்கடை அல்வா மாதிரி.! எப்படியும் படம் கொடுக்கிறவர்தான் மாளவிகா மோகனன். தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருப்பவர்.
இவரது முன்னாள் காதலர் பற்றி தன்னுடைய இன்ஸ்ட்ராகிராமில் வேடிக்கையான பதிவு போட்டிருக்கிறார். அதுதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
சமூக வலைதளங்களின் மீது ஆர்வம் காட்டி வரும் மாளவிகா மோகனன் மற்ற நடிகைகளைப்போல தினமும் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை போடுவதில்லை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது அழகான புகைப்படங்களையும், தாராள கவர்ச்சிப்புகைப்படங்களையும் பதிவிட்டு, இளைஞர்களை ஒட்டுமொத்தமாக தனது பக்கம் வசியம் செய்து வைத்துள்ளார்.
இந்த லாக்டவுனில் சமையல் அறை பக்கம் போகாத சில நடிகைகளில் இவரும் ஒருவர்.
படுக்கையறையே கதி என சமீபத்தில், இவர் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் இணையதள ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.என்னம்மா இப்படி பண்றியேம்மா, தூக்கம் கெட்டுபோற அளவுக்கா கடைய விரிக்கிறது என்று வாலிபர்கள் நொந்து போனார்கள்
மாளவிகா மோகனன், ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியான பாலிவுட் படமான பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில், உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் நாயகன் விக்கி கவுஷலுடன் இவர் டேட்டிங் சென்றதாக வதந்திகள் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தது.
இந்நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை போட தொடங்கியுள்ள மாளவிகா மோகனனின் இன்ஸ்டா பக்கத்தில், “உங்கள் எக்ஸ் லவ்வரை கண்டபடி திட்ட வேண்டுமா?, எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்” என ஒரு நெட்டிசன் குசும்பு காட்ட,அதனை பார்த்த மாளவிகா, “ஆம்.. கண்டிப்பா… இன்னைக்கு நைட்டுக்குள்ள உங்களுக்கு எழுதி அனுப்புறேன்” என மாளவிகா போட்ட பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பச்சை நிற வேட்டியும் உள்ளாடையும் அணிந்தபடி சமீபத்தில் மாளவிகா மோகனன் கொடுத்த ஹாட் போஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், அடுத்ததாக, வெறும் சட்டை மட்டுமே அணிந்து கொண்டு, மர்லின் மன்றோ போட்டோ பேக் ட்ராப்பில் இருப்பது போன்ற போட்டோவை போட்டு, “கொஞ்சம் மர்லின் மன்றோ, நிறைய நான்” என்ற கேப்ஷனை கொடுத்து அசத்தி வருகிறார் இந்த மாஸ்டர் நாயகி.