போகிற போக்கினைப் பார்த்தால் தமிழ்ச்சினிமாவில் பாதிப்பேர் வெப் சீரியலுக்குப் போய் விடுவார்கள் போலிருக்கிறது.
வீட்டுக்குள் அக்கடாவென இருந்த அமிதாப் குடும்பத்தையே கொரானா தொற்றிக்கொண்டு விட்டதே என்கிற பயம் தமிழ்ச்சினிமாவில் பாதிப்பேருக்கு வந்து விட்டது. சீரியலில் நடிகர்களுக்கும் உயிர்ப்பயம் வந்து விட்டது. பெரும்பாலான நடிகர்கள் ஷூட்டிங் செல்வதில்லை. காசு வேணும்னா எப்படியும் சம்பாதித்துக் கொள்ளலாம்.அதுக்கு உயிர் வேணுமே என்று மறுத்து இருக்கிறார்கள். இதனால் சீரியலின் நீளத்தை 20 வாரம் என குறைக்கப்போகிறார்களாம் .முன்னணி டி .வி.யும் வடநாட்டு சீரியல்களை தூசி தட்டிவிட்டது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பற்றிய கவலையில்லாமல் துணிச்சலுடன் வில்லனாகவும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் நடித்து வருகிறார்.
உப்பன்னா என்ற தெலுங்கு படத்தில் ராயனம் என்ற வில்லன் கதாப்பாத்திரத்திலும், அமீர் கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற இந்தி படத்திலும் நடிக்கிறார் தளபதி விஜயுடன் அவர் இணைந்து நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்காக காத்திருக்கும் நிலையில், கபெ ரணசிங்கம், கடைசி விவசாயி, லாபம், மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.
கமலின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தான் அந்த படத்தில் நடிக்கவில்லை என தெரிவித்தார். விஜய் சேதுபதி வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாகவும், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இந்த வெப் சீரிஸை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.