ராஷ்மிகா மன்டன்னா ! பெயரே வித்தியாசமாக இருக்குல்ல. கார்த்தியுடன் ஒரு படத்தில் நடிக்கிறார் இந்த பெங்களூர் பொண்ணு. செம ஜாலியான ஆளு. சுட்டித்தனம் அதிகம்னு சொல்லுவாங்க.அழகான பொண்ணுங்க சேட்டை பண்ணினால் அதுவும் ஒரு அழகு இருக்கும்தானே.!
காதலிக்கிற வயசுதான்.! கனவு காண்கிற கண்கள்தான்.கண் சிமிட்டி ஜாடை காட்டுவதும் அழகுதான்.
இவரிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்கமுடியும்?
“உங்களவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்கிற ஐடியா எதுவும் இருக்கிறதா?”
கேள்வியை உள்வாங்கியவர் சிரித்தபடியே சொல்லத் தொடங்கினார்.
“அவர் திறந்த மனம் உள்ளவராகவோ அப்படி இல்லாதவராகவோ இருந்தால் அது பிரச்னை இல்லை. ஆனால் உண்மையானவராக ,அமைதியானவராக இருக்க வேண்டும் .அவருடன் நான் அதிக நேரம் செலவிடக்கூடியவராக இருப்பது அவசியம் .நான் சந்தோஷமானவளாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.முக்கியமாக ரொமான்டிக் உள்ளவராக இருக்கவேண்டும். வயசு வித்தியாசம் பற்றி நான் கவலைப்படவில்லை.!”என்கிறார் .
சீனியர் சிட்டிசன் கவனிக்க.!