சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்டை படத்தின் மூலம் நடிகையாக இங்கு பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
இப் படத்தைத் தொடர்ந்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் கதாநாயகி இவர்தான்.!கவர்ச்சியின் இலக்கணமாக இவரை சொல்லலாம்
.சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா மோகனன்,.தனக்கு பிடித்தது எது, பிடிக்காதது எது, ஃபேவரைட் ஹீரோ யார்? என்பது பற்றி சொல்லியிருக்கிறார்.
“நான் மிகவும் ரொமான்டிக்கானவள்.. என்னுடைய வாழ்க்கையும் அப்படித்தான். நான் ரொமான்டிக் என்பதால் இரவு என்றால் மிகவும் பிடிக்கும்.இரவு நேரங்களில் அவுட்டிங் நண்பர்களுடன் சாட்டிங் இவையெல்லாம் பிடித்தமான ஒன்று.
நிறைய ரொமான்டிக்கான படங்களில் நடிக்க ஆசை.குறிப்பாக விஜய் மற்றும் ரன்பீர் கபூருடன் ஆசை. விஜயுடன் நடிக்கும் ஆசை நிறைவேறி விட்டது. அடுத்து ரன்பீர் கபூர் தான் . எனக்கு நீண்ட நாள் சூட்டிங் பிடிக்காது,.அம்மாவை நினைத்து கவலைப்படுவேன். அப்பாவும் அண்ணாவும் பிசினஸில் பிசி.அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருப்பார், அதனால்தான் எனக்கு லாங் சூட்டிங் பிடிக்காது” என கூறியுள்ளார்.