நேற்று முழுவதும் சிம்பு-திரிஷா கல்யாண மேட்டர் பற்றிய செய்திகள்தான் ஓடிக்கொண்டிருந்தது.
அந்த செய்திகளைப்பற்றி சிம்புவோ ,திரிஷாவோ சற்றும் கவலைப்படவில்லை. சிம்புவின் நண்பர்கள்தான் தவறான செய்திகள் என்பதாக அடிக்காத குறையாக அழுத்தி சொன்னார்கள். சிம்புவின் பெற்றோர் மறுப்புகள் விட்டே அலுத்துப்போன நிலையில்.!பாவம் அவர்கள்தான் என்ன செய்ய முடியும்?
திரிஷா சற்றும் கவலைப்படவில்லை.
சூடா ஒரு கப் காபி. அப்புறம் முடிவெட்டிக்கொள்ள சலூன். அழகு படுத்திக்கொண்டு சென்று விட்டார். கல்யாண செய்திகள் பற்றி சற்றும் கவலைப்படவில்லை.
காபி குடித்தது ,முடி வெட்டிக்கொண்டது இதையெல்லாம் தனது இன்ஸ்டரா பக்கத்தில் பதிவு செய்து படங்களை வெளியிட்டிருக்கிறார் .மாஸ்க்,கையுறை ,கருப்புக்கண்ணாடி அணிந்து கலகலவென இருக்கிறார். குட் ஹேர் டே என்கிற வாசகம் வேற.! அந்த வாசகத்துக்கு வேறு உள் அர்த்தம் எதுவும் இருக்குமோ?
அந்த கல்யாண கிசுகிசுவை சிம்பு -திரிஷா இருவருமே பொருட்படுத்தவில்லை.!