இயக்குநர் விக்னேஷ் சிவனும்,இசைப்புயல் ஏ ஆர் ரகுமானும் இதுவரை இணைந்து பணியாற்றாத நிலையில், முதல் முறையாக யூடியூப் சேனல் ஒன்றின் மூலம் இணைந்துள்ளனர்.
அதில் ஏ.ஆர்.ரஹ்மான் ,விக்னேஷ் சிவனிடம் முக்கியமான சில விஷயங்களைபகிர்ந்து கொண்டிருக்கிறார் .
தமிழில் பல பிரபலமான காவியங்களை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என்று கூறிய ஏஆர் ரகுமான், அதில் “சிலப்பதிகாரம்” என்ற காவியத்தை நடிகர் சூர்யா மற்றும் நயன்தாராவை வைத்து உருவாக்க வேண்டும் என விக்னேஷ் சிவனிடம் தன ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
ஒரு
இதையடுத்து விக்னேஷ் சிவன்,சூர்யா, ஏ ஆர் ரகுமான்,நயன்தாரா என புதுக்கூட்டணி விரைவில் உருவாகலாம் என்கிறார்கள். பாண்டிராஜ் இயக்கியுள்ள ‘பசங்க 2’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களை தயாரித்துள்ள சூர்யா, ‘பசங்க 2’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்த நிலையில்,தனியார் தொலைக்காட்சி நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கஉள்ளாராம்..