
தற்போது இந்திய அளவில் அரசியலில் நெபோட்டிசம் இருப்பது உண்மை. இதை யாரும் விளக்கு வைத்து தேட வேண்டியது இல்லை. ஒவ்வொரு மாநிலங்களிலும் மலிவு விலையில் தங்களது உறவுகளுக்கு அதிகார பங்கீடு நடக்கிறது.
இது திரை உலகிலும் பரவி இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் நெபோட்டிசம் மட்டுமில்லாமல் பிற மாநிலத்தவர் அங்கு தலை எடுக்கவிடாமல் செய்து விடுகிறார்கள்.
ஆஸ்கார் நாயகர்கள் ஏஆர் ரகுமான், ஒலிக்கலவை வித்தகர் ரசூல் பூக்குட்டி இருவரையும் பாலிவுட் வரவிடாமல் ஒரு கும்பல் தடையாக இருக்கிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இருவருமே தங்களின் ஆழ்ந்த வருத்தத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்
தற்போது ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி கோலிவுட் நிலவரத்தை பதிவு செய்திருக்கிறார்.
“தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????…”












