என்னதான் சொல்லுங்க வடிவேலுவின் காமெடியை ரசிக்கிற மாதிரி இப்ப இருக்கிற ஆட்களின் காமடியை ரசிக்க முடிகிறதா?
எதோ இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சக்கரை என்கிற மாதிரி சிலரை சில சில நேரங்களில் ரசிக்க முடிகிறது. வைகைப்புயல் வடிவேலு சில நேரங்களில் வறண்டு போனாலும் முந்தய படங்களை நினைத்துக்கொண்ட சிரிக்க முடிகிறது. கவுண்டமணி ,செந்தில் ஜோடி ,அடுத்து வடிவேலு இவருக்கு பின் யார் யாரோ வந்து போகிறார்கள்.
வடிவேலு மறுபடியும் சினிமாவுக்கு வரமுடியாமல் சில தடைகள். ஆனால் வெப் சீரியலுக்கு இல்லை.
இதனால் இயக்குநர் சுராஜ் ,வடிவேலு இணைந்து ஒரு வெப் சீரியலை தரப்போகிறார்கள்.
அமேசான் தளத்தில் அந்த சீரியல் வரலாம். சினிமாவுக்கு நிகராக ஓடிடி தளங்களும் வெயிட்டாகத்தானே கவனிக்கின்றன .பேச்சு வார்த்தையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
வாங்க வடிவேலு வந்து ஆட்டய ஆரம்பிங்க.!