கொரானா குறைகிறதா இல்லை இப்பத்தான் அது சேட்டையைத் தொடங்குதான்னு தெரியல.
பிரபலங்கள் எல்லாம் இப்பத்தான் மாட்ட ஆரம்பிச்சிருக்காங்க. ஆளுநர் ,உள்துறை மந்திரி ,முதல்வர்கள், முன்னாள் மந்திரிகள் என்று தனியார் ஆஸ்பத்திரிகளை நாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் குடும்பத்தையும் விட்டு வைக்கல.
கடந்த சில நாட்களுக்கு முன், ஐஸ்வர்யா ராய்.ஆராத்யா, அமிதாப்பச்சன் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினார்.அபிஷேக் பச்சனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார்.பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இன்னும் சில நடிகர் நடிகைகள் ரகசியமாக சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தெலுங்கில் ஜெயம், சித்திரம், நுவ்வு நேனு, நிஜம், ஒக்க வி சித்திரம், நேனு ராஜு நேனு மந்திரி உட்பட பல படங்களை இயக்கி உள்ள இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு நடந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் வெப் சீரிஸ் ஒன்றை இப்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெப் தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவே பீதியில் உள்ளதாம்.