மிகுந்த எதிர்பார்ப்பு அலைகளை உருவாக்கியுள்ள படம் சிவகார்த்திகேயனின் டாக்டர்.
முதல் போஸ்டரே எத்தகைய கதையாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியாத அளவுக்கு இருந்தது. டாக்டர் பக்கா கொலையாளியாக இருப்பாரோ என்கிற சந்தேகம் எழும் வகையில் ரத்தக்கறையுடன் சிவகார்த்திகேயன் அமர்ந்திருப்பார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரடக்சன்ஸ் ,கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் நெல்சன்.
அனிருத் இசையில் வெளியான ‘செல்லம்மா’ அன்றைய நாளிலேயே மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
பிரியங்கா ,அருள் முகன் ,கலையரசன் ,வினய் ஆகியோர் நடிக்கப்போகும் இந்தப்படத்தில் பாலிவுட்டை சேர்ந்த பிரபல காதல் ஜோடியின் மகளும் நடிக்கப்போவதாக நாலைந்து நாளாக பேச்சுகள் எழுகின்றன. அஜய் தேவ்கன் -காஜல் ஆகியோரின் மகள் நிஸா நடிக்கலாம் என்கிறார்கள். கதைக்கு இப்படி ஒரு கேரக்டர் தேவைப்படுகிறதோ என்னவோ.!
நிஸா இப்போதுதான் பருவம் முகிழ்த்து அதன் அடையாளங்களை வெளிப்படுத்துகிறார் . செழிப்புடன் இளமை வளர்ந்து இருக்கிறது .
நடிப்பது பற்றி அம்மா கஜோல் என்ன சொல்கிறார்.?
“நடிப்பது பற்றி நிஸா என்ன முடிவு எடுக்கிறாளோ தெரியாது.அது அவளது விருப்பம் .நாங்கள் அவள் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஆதரிப்போம்” என்று நைசாக சொல்கிறார்
இதான் சினிமாநடிகையின் அம்மா.!