நடிகர் ராணா-மிஹீகா ஆகியோரது திருமணம் நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமண விழாவில் மொத்தம் 30 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இதில் நடிகர்கள் ராம்சரண், அல்லு அர்ஜுன், வெங்கடேஷ், நாக சைதன்யா மற்றும் சமந்தா,ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொரோனா லெக்டவுன் காரணமாக அமல் படுத்தப்பட்டுள்ள விதிமுறை காரணமாக திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத பல திரையுலக பிரபலங்களுக்கு ராணா – மிஹீகா ஆகியோரது திருமணம் லைவ் ஸ்ட்ரீமிங்காக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நடிகர் ராணா டகுபதி மிஹீகா பஜாஜுக்கு தாலி கட்டி,அக்னி சாட்சியாக வலம் வரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.