தென்னகத்திரைவானில் மாசு மருவற்ற காற்று வீசத்தொடங்கி இருக்கிறது.
அண்மையில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 45 ஆண்டு சாதனையை கடவுளின் தேசத்தை சேர்ந்த மோகன்லாலும் மற்றும் சிலரும் இணைந்து பொதுவான ரஜினியின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு பெருமை சேர்த்தனர்.
அண்டை மாநிலமான தெலுங்கு தேசத்தை சேர்ந்த சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு தமிழகத்தை சேர்ந்த தளபதி விஜய்க்கு மகிழ்ச்சியான சவாலை விட்டிருந்தார். வீடுகளில் மரங்கள் வளர்ப்பதில் போட்டியிட முடியுமா என்று கேட்டிருந்தார்.
அதற்கு பதில் தரும் வகையில் தளபதி விஜய் இன்று தன்னுடைய மாளிகையில் மரங்களை நட்டு “இது உங்களுடைய சவாலுக்கு பதில் மகேஷுபாபு காரு !பசுமை இந்தியா ,நலமிகு ஆரோக்கியம் !பாதுகாப்பாக இருங்கள்”என்று சொல்லி புகைப்படங்களை டேக் செய்திருக்கிறார்.
வழக்கம் போல கன்னடத்தில் இருந்து எதுவும் வரவில்லை !