அறிமுகமானபோது நடிகை லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன.தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைய கொம்பன், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
வேதாளம் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த லட்சுமிமேனனுக்கு அதன் பிறகு றெக்க திரைப்படம் கடைசியாக வெளியானது.
அதன் பின் பிரபு தேவாவுடன் எங் மங் சங், கவுதம் கார்த்திக்குடன் சிப்பாய் ஆகிய படங்களில் நடித்துவந்தார், ஆனால் இப்படங்கள் இன்றுவரை வெளியாகாமல் தவித்து வருகிறது.
இந்நிலையில் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வரும் லட்சுமிமேனன் தற்போது வெளியிட்டுள்ள குச்சிப்புடி நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
லட்சுமிமேனன் குச்சிப்புடி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலைகளில் தேர்ந்த லட்சுமிமேனன், படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் குச்சிப்புடி, பரதநாட்டியம் வகுப்புகளும் நடத்தி வருகிறார்.தற்பொழுது அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.