அறிமுக இயக்குனர் அருள் இயக்கி தயாரித்து மற்றும் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ஒரு பேய் படம் காதம்பரி.
கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா ,மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர்.
அதென்ன காதம்பரின்னு பேரு என்று இயக்குநரிடம் கேட்க “அது நயன்தாராவின் பேரு .விக்னேஷ்சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாராவின் பேருதான் காதம்பரி. ராசியா இருக்கும்னு வெச்சேன்!
முழுக்க முழுக்க திகில் படம் . கதை ஆந்திரா அருகிலுள்ள ஒரு அடர்ந்த காட்டில் நடக்கிது ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதை. குறைந்த கதாபாத்திரங்களைக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் முடிச்சிருக்கேன்.”என்று கூறினார் .
நடிகைகள் பார்வதி நாயர் , கிரிசா குரூப் நடிகர்கள் டேனியல் பாலாஜி, டேனியல் அண்ணி போப் இசையமைப்பாளர்கள் சந்தோஷ் தயாநிதி, கணேஷ் சந்திரசேகரன் மற்றும் புகழ்பெற்ற தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆகியோர் காதம்பரி டிரைலரை வெளியிட்டு உள்ளனர்.
முதலில் இதை இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் ட்ரெய்லர் வெளியிட உதவி இயக்குனர் அணுகியதாகவும் ஆனால் விக்னேஷ் சிவன் வெளியிட மறுத்ததாக கூறப்படுகிறது. காதம்பரி என்ற தலைப்பில் நயன்தாராவை வைத்து புதிய படம் இயக்க இருந்ததாகவும் ஆனால் நினைத்த தலைப்பை வேற படத்திற்கு வைக்கப்பட்டதால் தலைப்பு இல்லை என்று வருத்த பட்டதாகவும் கூறப்படுகிறது