துவம்சம் பண்ணுகிறார் கங்கனா .சுஷாந்த் சிங் மரணத்துக்குப்பிறகு அவர் சினம் கொண்ட சிறுத்தையாகவே மாறிவிட்டார் .அவரது முக்கிய இலக்கு கரண்ஜோகர் .கிழி கிழி என கிழித்து தொங்கவிடாத குறை.
இந்த சண்டை எங்கே கொண்டு விடுமோ தெரியவில்லை. கங்கனாவுக்கு எதிராக முக்கிய அரசியல் கட்சியும் இறங்கியிருக்கிறது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாந ஆள் கரண் ஜோகர் அவருக்கு எதுக்கு பத்மஸ்ரீ விருது? மத்திய அரசே பிடுங்கு என்பது அவரது புதிய நோக்கமாக இருக்கிறது.
“அந்த ஆள் கரண்ஜோகர் என்னை பகிரங்கமாகவே மிரட்டுகிறார்.சுஷாந்த் சிங் வாழ்க்கையை சதி செய்து கெடுத்தார்.பாகிஸ்தானுடன் நடந்த யூரி யுத்தத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார். இப்போது நமது ராணுவத்துக்கு எதிராக படம் எடுத்திருக்கிறார். இந்த ஆளுக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கலாமா?திரும்ப வாங்குங்க” என்று மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
முக்கியமான திருப்பம்தான்.!