
தியேட்டரா ,ஓடிடி தளமா ?
பூவா தலையா போட்டுப்பார்க்கிற மாதிரி தற்போது தயாரிப்பாளர்கள் காசு சுண்டிவிட்டுப் பார்க்கிறார்கள்.
சூர்யாவின் சூரரைப்போற்று ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு ஆந்திராவிலும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
சூர்யாவைப்போல கார்த்திக் சுப்பராஜும் தன்னுடைய ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் ஜகம் சுகம் ஆனதும் ஜகமே தந்திரம் வெள்ளித்திரையில் என்று அறிவித்து விட்டார் கார்த்திக் சுப்பராஜ். அதாவது கொரானா ஒழிந்து உலகம் ஆரோக்கியமடைந்து தியேட்டர்கள் திறந்தபிறகு வெளியாகும் என்பதை இப்படி அறிவித்திருக்கிறார்.
நல்ல வேலை திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு வேலை மிச்சம்.!












