
ஓடிடி தளத்தில் சூரரைப்போற்று வெளியாவதற்கு சிலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தாலும் திரைப்பட ரசிகர்களின் ஆதரவு சூர்யாவுக்கு பெருமளவில் இருக்கிறது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி இருக்கிற சூரரைப் போற்று படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இசை அமைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.
இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகியிருக்க வேண்டியது. கொரானா கொள்ளை நோய் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் முடங்கிப்போய் இருந்தது. எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்பது உறுதியாகத் தெரியாததால் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
60 கோடியில் தயாரிக்கப்பட்ட சூரரைப்போற்று படம் 100 கோடிக்கு விலையாகி இருக்கிறது. மேலும் உலகம் முழுவதுமாக 200 இடங்களில் வெளியாகிறது. இது சூர்யாவின் ரசிகர்களை ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.












