இயக்குநர் -நடிகர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் .
இவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். டாப்ஸி நாயகியாக நடிக்கப்போகும் கதையின் படப்பிடிப்பு செப்டம்பரில் ஜெய்ப்பூரில் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.
குறைந்த அளவுக்கு குழுவினரை வைத்து ஆரம்பிக்கலாம் என்கிற ஐடியா.
கை நிறைய படங்கள் இருந்தபோதிலும் தீபக் சொன்ன கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. டாப்ஸிக்கு தமிழில் ஜனகனமன என்கிற படம் மட்டுமே கையில் இருக்கிறது.
மற்ற விவரங்கள் கொரானாவுக்கு அரசு முடிவு கட்டிய பின்னர் வெளிவரும் என நம்பலாம்.