எப்படியெல்லாம் உல்லாசமாக இருந்தேன் .இப்படி தூக்கிட்டீங்களேய்யா என்று கதறுவது மாதிரி இருக்கா படத்த பார்த்தா?
இல்ல சத்தியமா அப்படியில்லே .காத்தோட்டமா இருக்குன்னு சொல்றமாதிரிதான் இருக்கு. அவங்க வேற யாருமில்ல. ராகினி திவேதி. கன்னட நடிகை. பெரிய ஆளு. இந்த நடிகைக்கு போதை மருந்து தடுப்பு சட்டப்பிரிவு போலீசார் தங்களிடம் ஆஜராகும்படி நோட்டீஸ் விட்டிருந்தாங்க. வக்கீல் மூலமா நடிகை பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தாங்க. ஆனால் புதன் கிழமை ராத்திரியே போலீஸ் நடிகையை தூக்கிடுச்சு.
இன்னொரு நடிகையான சஞ்சனா கல்ராணியின் ஆளு ராகுல் என்பவரையும் தூக்கிட்டாங்க. கல்ராணிக்கும் நோட்டீஸ் போயிருக்கு. அவங்க என்னிக்கு போலீஸ் விருந்தாளியாவாங்க என்பது சீக்கிரமே தெரிஞ்சிரும்.
கன்னட உலகமே ஆடிப்போயிருக்கு. எல்.எஸ்.டி. கொக்கெயின் இதெல்லாம் கன்னட சினிமா உலகில் மலிவா கிடைக்கிதுன்னு சொன்ன உடனேயே போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்கு.
ஆனா மும்பையில் சினிமாப்புள்ளிகள் வீட்டில் எல்லா போதைப்பொருட்களுமே கிடைக்கிதுன்னு கங்கனா ரனாவத் பகிரங்கமாக சொல்லியும் மகாராஷ்டிரா போலீஸ் எந்த வித நடவடிக்கையும் எடுக்கல.