எங்கேயும் எப்போதும், சேரன் இயக்கிய ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை உள்பட பல படங்களில் நடித்துள்ளார் சர்வானந்த். தெலுங்கில்ஆர்எக்ஸ் 100 என்ற படத்தின் மூலம் பலரையும் கவர்ந்த இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில், தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘மகா சமுத்திரம்’ என்ற புதிய படத்தில் சவாலான வேடத்தில் நடிக்க உள்ளார்.
அஜய் பூபதி இயக்க உள்ள மகா சமுத்திரம் என்ற படத்தில் சர்வானந்த், ரவி தேஜா ஆகியோருடன் சித்தார்த் மற்றொரு நாயகனாக நடிக்கிறார் என்கிறார்கள் . இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.