
இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் “கமனம்” படத்தில் நடிகை ஸ்ரேயா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
நிஜ வாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக “கமனம்” என தலைப்பிடப்பட்ட இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாராகிறது.
பிரபல இயக்குனர் கிரிஷ் “கமனம்” படத்தின் முதல் பார்வை போஸ்டரை ஸ்ரேயாவின் பிறந்த நாளன்று வெளியிட்டுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ஞான சேகர் வி.எஸ். இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார்.இப் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.












