
“தமிழ்ப் படங்களை தவிர்த்து வருகிறேன். சிறந்த, அழுத்தமான கேரக்டருக்காக காத்திருக்கிறேன்.” என்கிறார் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்த காமடி நடிகை வித்யூலேகா.
தமிழ்நாட்டில் தொழில் நடத்துகிற வடஇந்தியரை காதலித்து கல்யாணம் செய்து கொள்கிறார்.
. இது குறித்து வித்யூலேகா கூறியுள்ளதாவது,
“இது காதல் திருமணம்தான். நாங்கள் நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தவில்லை. சூழல் சரியில்லை என்பதால் இப்போதைக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்று நினைத்தோம். ரசிகர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கட்டும் என்று அமைதியாக இருந்துவிட்டோம்.கொரோனா நிலைமை சீரான பிறகே எங்கள் திருமணம் நடக்கும். தமிழ் சினிமாவில் படங்களை தவிர்த்து வருகிறேன். சிறந்த, அழுத்தமான கேரக்டருக்காக காத்திருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், தெலுங்கை ஒப்பிடும்போது தமிழில் எனக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன” என்று கூறியுள்ளார்.
அப்படிப்போடு அருவாளை.!












