கங்கனாவின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் மகாராஷ்டிர மாநில சிவசேனா அரசு திகைத்துப் போயிருக்கிறது.
“மும்பையை பார்க்கிறபோது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கிற காஷ்மீரைப் போல இருக்கிறது “என்று கங்கனா சொல்லியிருந்தார். இவரை மும்பைக்குள் கால் வைக்கவிட மாட்டோம் என்று சிவசேனா பிரமுகர் ஒருவர் சொல்லியிருந்ததற்கு பதில் அளிக்கிற வகையில் கங்கனா அப்படி சொல்லியிருந்தார்.
இந்த பேச்சை கண்டிக்கவில்லையே என்று மத்திய பாஜக அரசு மீது சிவசேனா தலைமை ஸ்போக்ஸ்மேன் சஞ்சய் ரவுத் குற்றம் சுமத்தினார்.
இதற்கு கங்கனா கடுமையுடன் பதில் சொல்லியிருக்கிறார்.
“சிவசேனா குண்டர்கள் என்னை பகிரங்கமாக கொலை செய்ய முயன்றாலும் பாஜக வேடிக்கை பார்க்க வேண்டுமா? என்னை கற்பழிக்கப்பார்த்தாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்று சஞ்சய் ரவுத் விரும்புகிறாரா ? மாபியா கூட்டத்துக்கு எதிராக போராடுகிற ஒரு இளம் பெண்ணுக்கு மத்திய அரசு பாதுகாப்பாக இருக்கக்கூடாதா?”
காட்டமுடன்தான் கேட்டிருக்கிறார் கங்கனா .