சுஷாந்த் சிங் மர்மமரண மேட்டர் தற்போது இரண்டு தேசிய கட்சிகளிடையே நடக்கிற மோதலாக மாறி வருகிறது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் , பாலிவுட் மாஃபியாக்கள் என்று சில இயக்குனர்களை கங்கனா குற்றம் சாட்டியிருந்தார்.பின்னர் நெபோடிசம் என்கிற சர்ச்சை கருத்தையும் வெளியிட்டு, வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து,பின்
இவ்விவகாரம் தொடர்பாக , பாலிவுட்டை களங்கப்படுத்த நினைக்கிறார் என கங்கானாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் கங்கானாவுக்கு எதிராக கூறியிருப்பதாவது:
“போதை பழக்கத்தை ஒழிக்க நிஜமாகவே எதாவது செய்ய நினைத்தால் அதற்கு எதிரான போராளியாக மாறுங்கள். ஒரு வீடியோவில் போதை பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததாகச் கூறியிருந்தீர்கள். உங்கள் அனுபவம் பற்றி, அதிலிருந்து மீண்டது பற்றி, போதை மருந்து ஏன் மோசமானது என்பது பற்றி சொல்லுங்கள். நடிகர் சஞ்சய் தத் அதைச் செய்துள்ளார்.தீபிகா படுகோன் மனநலம் குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.அவரிடமிருந்து நீங்கள் அதிகம் கற்றுக் கொள்ள வேண்டும்.துரதிர்ஷ்டவசமாக நீங்கள் பேசும் விதம், உங்கள் நோக்கம் தவறு என தெரிகிறது.நீங்கள் எதைச் செய்தாலும் பழிவாங்குவதற்காக அல்ல, நல்ல நோக்கத்தோடு செய்யுங்கள். இவ்வாறு நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா கூறியுள்ளார்.இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் .