நடிகர் உதயா எழுதி முதல்முறையாக இயக்கிய “செக்யூரிட்டி” குறும்படம், தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.
இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம், தமிழக ரசிகர்கள்,அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
காஸ்மோ திரைப்படவிழா,சவுத் பிலிம் மற்றும் கலை மையம் ,தென்அமெரிக்கா திரைப்படவிழா உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ,போர்ட்பிளேர் சர்வதேச திரைப்படவிழாவில் 20 நாடுகள் கலந்துகொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் குறும்படமாக “செக்யூரிட்டி” வென்றுள்ளது.