
இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது நடிகை பாயல் கோஷ் கூறிய பாலியல் வன்முறைதான் பாலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக்.
நடிகை கங்கனா ரனாவத், அந்த இயக்குநர் அனுராக் காஷ்யப் மீதான பாயல் கோஷின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதரவாக தனது டுவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அனுராக் காஷ்யப் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தகுதியானவர்தான் . பாயல் கோஷ் என்ன சொல்கிறாரோ, அவை அத்தனையும் எனக்கும் பல பெரிய ஹீரோக்கள் மூலம் நடந்துள்ளது,அனுராக் பல்வேறு நபர்களுடன் திருமணம் செய்தபோதும் ஒருபோதும் ஒருவருடனும் ஒற்றுமையாக இருந்ததில்லை, அனுராக், பாயலுக்கு என்ன செய்தார் என்பது பாலிவுட்டில் ஒரு பொதுவான நடைமுறையாகும்.என்று கூறியிருப்பவர் ,மற்றொரு டுவிட்டில்,’திடீரென்று வேன் அல்லது ரூம் கதவைப் பூட்டியபின் ,அல்லது ஒரு பார்ட்டியில் நட்பு நடனம் ஆடும் போது , வீட்டிற்கு வரச்சொல்லி வலுக்கட்டாயமாக வற்புறுத்துவார்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.












