இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கிய தோனி, கடந்த ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தோனி கிரிக்கெட் மட்டுமின்றி சினிமா, மற்றும் கால்பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்நிலையில் தற்போது தோனியின் தயாரிப்பு நிறுவனம் புதிய ‘வெப் சீரீஸ்’ ஒன்றை தயாரிக்க வுள்ளது.. தோனி . இந்த வெப்தொடர், புராண காலத்தையும், சைன்ஸ் பிக்ஷனையும் கலந்து உருவாகவுள்ளதாம். மேலும் இது ஒரு நாவலின் தழுவல் என்ற தகவலும் வெளியாகியுள்ளது .
இது தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்,நடிகையர் ,இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.