கடன் வாங்காமல் படம் எடுத்துவந்த நிறுவனங்கள் எல்லாம் ஒதுங்கிவிட்டன .இதனால் படங்கள் எடுப்பதற்கு சொத்துக்களை விற்றும் ,மீட்டர் வட்டிக்கு வாங்கியும் படங்களை எடுக்கவேண்டிய நிலை. வட்டிக்கு கொடுப்பதற்கென்றே சிலர் சினிமாத்துறையில் இருக்கிறார்கள். அவர்களிடம் மாட்டிய பலர் பரலோகம் சென்றிருப்பதும் இந்த கோலிவுட்டில்தான்.!
அதிர்ஷ்டவசமாக தப்பியவர்களில் நடிகர் விமலும் ஒருவர்.பிரச்னைகள் மத்தியில் இருந்து வந்த இவருக்கு தற்போது காய் கொடுத்திருப்பவர் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
விமல் நடிப்பில் இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் ‘எங்க பாட்டன் சொத்து’, இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சண்டக்காரி’, தர்மபிரபு இயக்குனர் முத்துகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கன்னிராசி’ ஆகிய படங்கள் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டிற்கு தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த “படவா, புரோக்கர், மஞ்சள் குடை, லக்கி மற்றும் இயக்குனர் வேலு இயக்கத்தில் பெயரிடப்படாத படம்” படங்களை விரைவாக முடித்து கொடுத்துவிட்டு, இயக்குனர் சரவண சக்தி இயக்கத்தில் ‘குலசாமி’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்திலும், இயக்குனர் சுராஜ் உதவியாளர் R. துரை இயக்கத்தில் ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றி’ என்ற படத்திலும் நடிக்க தயாராகி வருகிறார் விமல்.
‘குலசாமி’ படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘குலசாமி’ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் 16 ஆம் தேதி தொடங்குகிறது.