சங்கம் என்றாலே கோஷ்டிகளும் கூடவே உருவாகிவிடும்.
இதில் தென்னிந்திய நடிகர் சங்கத்தை அப்படியே ஃ பாலோ பண்ணியிருக்கிறது சின்னத்திரை நடிகர் சங்கம் . தலைவரை தூக்கிவிட்டு இயக்குநர் ஒருவரை திடீர் தலைவராக்கி இருக்கிறார்கள்.
தூக்கி வீசப்பட்டவர் சங்கத்தலைவர் ( ரவிவர்மா ) .திடீர் தலைவர் ஆனவர் மனோபாலா.
என்னதான் நடந்தது சின்னத்திரை நடிகர் சங்கத்தில்?
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்ட, கடந்த ஆண்டு மலேசியாவில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது.
இந்த கலை விழாவில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவி வர்மா பண மோசடி செய்ததாக அவர் மீது சின்னத்திரை நடிகர்கள் பலரும் புகார்கள் கூறினார்கள் . இந்த நிலையில்,சின்னத்திரை நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடியதாக சொல்கிறார்கள். இந்த கூட்டத்தில் சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ரவி வர்மாவை பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்து புதிய தலைவராக மனோபாலா தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அதிரடி அறிவிப்பை அதன் பொதுச் செயலாளர் ரிஷிகேஷ் தெரிவித்துள்ளார் மேலும், போஸ் வெங்கட் உள்பட ஒரு சில உறுப்பினர்களும் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
எதிர் விளைவு இல்லாமல் இருக்குமா?
நீக்கப்பட்டதாக சொல்லப்படும் தலைவர் ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது
‘ 4 -2 -2019 முதல் மூன்று ஆண்டுகள் வரை நான் சங்கத்தின் தலைவராக சங்க உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு தொடர்ந்து இருந்து வருகிறேன். தற்போது சங்கத்தில் உள்ள சில நிர்வாகிகள் மற்றும் சங்கத்திற்கு தொடர்பில்லாத நபர்களும் சேர்ந்து. எந்த ஆதாரமும் இன்றி என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் சங்கத்தின் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சிலர் தலைவர் என்று கூறி தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். இது குறித்து விளக்கம் அளிப்பதற்காக தலைவராகிய நான் ஆதாரங்களுடன் நாளை மாலை (5,10,2020) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன்”என்று கூறி இருக்கிறார்.
அரசு அதிகாரிகள் உன்னிப்பாக கவனிப்பார்களாக .!