இயக்குநர் பிரபு சாலமன்.தற்போது காடன், கும்கி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
காடன் படம்,தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது தமிழில் ராணா, விஷ்ணு விஷால்ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
கடந்த 2018 ஆம் ஆண்டு இதன் படப்பிடிப்பு தாய்லாந்து காடுகளில் 18 யானைகளுடன் சுமார் 25 நாட்களும், அதோடு மூணாறு உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அடர்ந்த காடுகளிலும் இதன் படப்பிடிப்பு நடந்தது.
கொரோனா லாக்டவுன் காரணமாக வெளியீடு தள்ளிப்போய்விட்டது .இதனால் , பல படங்கள் இப்போது ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. காடன் படமும் ஓடிடியில் வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது.,
இது உண்மையா?
இயக்குனர் பிரபு சாலமன்என்ன சொல்கிறார்?
‘காடன் பல யானைகளுடன் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தால்தான் அந்த அனுபவம் கிடைக்கும். ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இதில் பணியாற்றி இருக்கிறார். அவர் உழைப்பையும் திறமையையும் தியேட்டரில், படத்தை வெளியிட்டால் மட்டுமே அனுபவிக்க முடியும். அதனால், ஓடிடியில் காடன் ரிலீஸ் ஆகாது. தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும்.
படம் ரெடியாகிவிட்டது. அதே போல் கும்கி 2 படமும் ரெடியாகிவிட்டது’.இந்தப் படத்தில் மதியழகன் நாயகனாக அறிமுகமாகிறார். ஒரு குட்டி யானைக்கும், சிறுவனுக்கும் உருவாகும் நட்பு, அவர்கள் பெரியவர்களாகும் வரை தொடர்கிறது. அதுதான் கதை.
குட்டி யானைக்காக இலங்கை, பர்மா, தாய்லாந்து உட்பட ஏராளமான நாடுகளில் அலைந்து திரிந்தோம். குட்டி யானை கிடைத்தால் பர்மிஷன் கிடைக்கவில்லை. பர்மிஷன் கிடைத்த இடத்தில் இருந்த யானை ஒத்துழைக்கவில்லை. கடைசியாக தாய்லாந்தில் அமைந்து இரண்டு கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டோம். யதார்த்தமான படமாக இது இருக்கும்.இப்படமும் ஓடிடியில் வெளியாகாது” என்கிறார்.