பிரபல தொலைக்காட்சி சீரியல் வில்லி நடிகை சாந்தி வில்லியம்ஸ் என்பவரின் மகன் சந்தோஷ் ( வயது 35 ) நேற்று இரவு மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக தகவல் கிடைத்திருக்கிறது. இதுவரை சந்தோஷ் இறப்பு குறித்து எந்த தகவலும் வெளியிடாததால் சந்தேகம் வலுத்து வருகிறது .பிரபல ஒளிப்பதிவாளர் வில்லியம்ஸ் -சாந்தியின் மகன்தான் சந்தோஷ்.
சம்பவ நாளுக்கு முதல் நாள் இரவு வெளியில் சென்றிருந்த சந்தோஷ் தன்னுடைய டூ வீலரில் இருந்து கீழே விழுந்து காயமடைந்திருக்கிறார் என்றும் அதை வெளியில் சொல்லாமல் வீட்டுக்கு வந்து படுத்து விட்டதாகவும் அதன் பிறகுதான் மாரடைப்பினால் இறந்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
சென்னை விருகம்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.