
குஷ்பூவைப்போலத்தான் விஜயசாந்தியும்.!
அவ்வப்போது காங்கிரஸ் மேலிடத்தை முறைத்துக் கொள்வார்..இவருக்கு சென்னையில்தான் பதிவுத் திருமணம் நடந்தது. தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் உள்ளிட்ட சிலர் சாட்சி கையெழுத்திட்டிருந்தனர். ரகசியமாக நடந்த இந்த கல்யாணத்தை பதிவுச்சான்றிதலுடன் தமிழ் வார இதழ் ‘தேவி’ வெளியிட்டிருந்தது. அதை வெளியிட்ட எனக்கும் விஜயசாந்திக்கும் அன்று சின்னதாக சண்டை. அதை ஏன் இப்போது கிண்டுவானேன்!
தெலுங்கானாவில் டப்பக்கா இடைத்தேர்தல் வருகிறது. இந்த தொகுதி டிஆர்எஸ் கட்சி வசம் இருந்தது.
ஆனால் தற்போது நிலைமை வேற.! 
காங்கிரஸ் ,பாஜக இரண்டும் பலமாக இருக்கின்றன.முன்னைப்போல சந்திரசேகர்ராவ் கட்சியினால் 62 ஆயிரம் வாக்குகள் அதிகம் வாங்க முடியாது என்கிறார்கள்.
நவம்பர் 3 இல் பலப் பரீட்சை !
காங் கட்சியின் நட்சத்திர பேச்சாளர் விஜயசாந்தி. இந்த இடைத்தேர்தலை கண்டு கொள்ளவே இல்லை.
தமிழ்நாட்டில் குஷ்பூ பாஜகவுக்கு தாவியத்தைப்போல இவரும் பாஜகவுக்கு தாவுவார் என்பதாக எதிர்பார்க்கிறார்கள். தங்கை குஷ்பூவைப்போல அக்கா விஜயசாந்தி (54 வயது) பின் பற்றுவார் என எதிர்பார்க்கிறார்கள்.
எத்தனை கோடியோ!












