நடிகர் சூர்யா தயாரிப்பு,இயக்கம் என இரண்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்,சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது.
இப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் வாடிவாசல்.கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கும் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
முதல்முறையாக சூர்யா – வெற்றிமாறன் கூட்டணி இணைந்திருப்பதால் இப் படத்தின் மீது ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சூர்யாவின் புதிய தோற்றத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட தலைமுடியுடன் தோன்றும் சூர்யாவின் புகைப்படம் குறித்து அவரது ரசிகர்கள் ,இது வாடிவாசல் படத்திற்காகவா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.