எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் ,அவருடன் வலிமை படத்தில் இணைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக நின்று போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக,ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.
கடந்த 2 வாரங்களாக நடந்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நேற்று முன்தினம் தான் நடிகர் அஜித் கலந்துகொண்டு நடித்து வருகிறார். முழு வீச்சில் நடந்து வரும் வலிமை படப்பிடிப்பு வரும் நவம்பருக்குள் முடிக்கப்பட்டு வரும் 2021- பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என்கிறார்கள்.