
இந்தா போயிருச்சு அந்தா போயிருச்சுன்னு பிலிமு காட்டினாய்ங்களோ என்னவோ இப்பத்தான் ஒவ்வொரு பெரிய ஆளா பார்த்து கொரானா தூக்குது!
பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வோர் என ஒருவர் விடாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது. கொரானாதான் குறைந்து விட்டதே என்று மாஸ்க் அணியாமல் செல்வோரின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகமாகிவிட்டது.
இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியானதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ஆச்சார்யா படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அரசு நடைமுறைகளின் படி சிரஞ்சீவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு அறிகுறி எதுவும் இல்லாத நிலையிலும் கொரோனா உறுதியானது.
இதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.மேலும் தன்னை கடந்த 5 நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தான் முழுமையாக குணமடைந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.












