
“தீபாவளிக்கு வெடிகள் மட்டும்தான் வெடிக்கணுமா ,நானும் வெடிப்பேன்ல “என்று ஒரு செய்தி கோலிவுட்டை பரபரப்பாக்கிக் கொண்டிருக்கிறது,கடந்த சில நாட்களாக.!
“பிரபு தேவா மீண்டும் திருமணம் செய்து கொள்ளப்போகிறார். இவரது வீட்டுக்கு ஒரு பெண் டாக்டர் வந்து போகிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக வெளியில் சென்று வருகிறார்கள். கொழுந்தியாள் உறவுப் பெண்தான்.!”
இந்த செய்தி பற்றி விசாரித்தோம். 
“வெட்டுவாங்கேணியில் பிரபு புதிதாக ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அங்குதான் அவர்கள் சந்திப்பு நடக்கிறது “என்கிறார்கள். உறவுக்கார பெண் என்கிற செய்தி தவறானது என்கிற செய்திதான் நமக்கு முதலில் கிடைத்தது.
பிரபுவின் அப்பா வழியிலும் இல்லை ,முதல் மனைவி ரமலத் வகையிலும் இல்லை என்பதை உறுதி செய்தார்கள். ஆக கொழுந்தியாள் என்கிற செய்தி எதற்காகவோ சேர்ந்து கொண்டு இருக்கிறது.
பிரபுதேவா -நயன்தாரா காதல் ஏறத்தாழ நான்காண்டுகள் ஓடிக் களைத்த பின்னர்தான் பிரிவு வந்தது. பிரபுவை கல்யாணம் செய்வதற்காகவே நயன் இந்து மதத்துக்கு மாறினார். அதன் பலன் தற்போது விக்னேஷ் சிவனுக்கு கிடைக்கப்போகிறது.
பிரபுதேவாவுடன் தற்போது டேட்டிங்கில் இருக்கிற அந்த டாக்டர் பெண் யார்?
அதுதான் மர்மமாக இருக்கிறது.












