நடிகர் தவசி கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.அவரை திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ-ஆன மருத்துவர் சர்வணன் தனது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார். அவரது சிகிச்சைக்கு திரையுலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர்.நடிகர் விஜய் சேதுபதி ரூபாய் 1 லட்சமும், நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 ஆயிரமும், நடிகர் சூரி ரூபாய் 20 ஆயிரமும் கொடுத்து உதவியுள்ளனர். இந்நிலையில், நடிகர் சிலம்பரசன்,நடிகர் தவசிக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.