கோவிட் 19 தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் ஹைதராபாத் சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொண்டவர் சரத்குமார்.
உடல் மிகவும் அசதியாக இருக்கிறது என்று சோதனை செய்து கொள்ள சென்றபோதுதான் அவருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது.
மருத்துவமனையில் இருக்கிற அவரிடம் இருந்து செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டார்கள். தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது.
அவரது மனைவி ராதிகாவிடம் கேட்டபோது மிகவும் உடைந்தே காணப்பட்டார். குரலிலும் உற்சாகமில்லை. “கணவரை பார்க்க செல்லமுடியவில்லையே “என்கிற கவலைதான் அவரை அழுத்திக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரம் பேசினால் அழுது விடுவார் போலிருந்தது.அதனால் ஆறுதல் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.
தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ பேர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் சரத்குமார்.தனக்குத் தெரிந்தவர்களுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டாலே போதும் ஓடோடி சென்று உதவுகிற நல்ல உள்ளம் படைத்தவர் .அவரால் பலன் பெற்றவர்கள் அவரை மறப்பதும் நன்றி கொல்வதும் சரத்குமாரின் ராசி போலும்!
அவர் விரைவில் குணம் பெற்று சென்னை திரும்புவார்.நாமும் ஆண்டவனை வேண்டுவோம்.