
நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று வயது 70.
புதிய கட்சி தொடங்கி அரசியலில் நுழையப்போகிற உச்ச நடிகர் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார்
ஆன்மீக வழி அரசியல் என்று சொல்லிக்கொள்ளும் அவரது பிறந்த நாள் இன்று சனி மகா பிரதோஷநாளில் கொண்டாடப்படுகிறது.
அவரது தீவிர ரசிகர்கள் நேற்று நள்ளிரவில் இருந்தே கேக் வெட்டி கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.சிலர் அவரது வீட்டு அருகிலேயே கேக் வெட்டி மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டனர்.
இன்றைய பிறந்த நாள் தொடர்பாக டிவிட்டர் இணைய தளத்தில் ரஜினியின் கணக்கில் எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை.ஆனால் அவரது ரசிகர்கள் ஹேஷ்டாக் உருவாக்கியிருக்கிறார்கள்.
சிலம்பரசன் தன்னுடைய வாழ்த்தில் ஆயிரங்காலம் வாழவேண்டும் என வாழ்த்தியிருக்கிறார்.நடிகர் பார்த்திபன் ரஜினியின் பெயரை குறிப்பிடாமலேயே வாழ்த்தியிருக்கிறார்.சினிமா நடிகர்கள் நடிகைகள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து செய்திகளை அனுப்பி இருக்கிறார்கள்.ஆனால் வழக்கம்போல அவர் இந்த ஆண்டும் தரிசனம் தரவில்லை.












