புரட்சித் தலைவர் திமுகவில் இருந்தபோது திமுக திலகம் அல்ல; தனிக்கட்சி துவங்கிய பிறகு அதிமுக திலகமும் அல்ல; என்றென்றும் அவர் மக்கள் திலகம்.
எம்.ஜி.ஆர் முகத்தைக் கூட பார்த்திராதவர்களே, நான் அவர் மடியில் வளர்ந்தவன். நினைவிருக்கட்டும். #எதுவும்_தடையல்ல pic.twitter.com/Tvp0x7d8tc— Kamal Haasan (@ikamalhaasan) December 15, 2020
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய முதல் கட்ட தேர்தல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கினார். எம்.ஜி.ஆர். பாணியில் அப்படியே தென் மாவட்டங்களை குறி வைத்து நான்கு நாள் மக்களை சந்தித்தார். சில இடங்களுக்கு செல்ல அவருக்கு போலீசார் அனுமதி தரவில்லை.
பிரசாரம் ஒரு பக்கம் ,டிவிட்டர் வழி பிரசாரம் என இரு வகைகளில் கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்.
இதோ …அவரது டிவிட்டர் பதிவுகள்.!
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைக்குப் போன ஓர் இடத்திலும் தோல்வியோடு திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருந்திருக்கிறார்கள். ரொக்கம், தங்கம், வைரம் என்று திருட்டில் செழிப்போ செழிப்பு. அரசு எவ்வழி, அதிகாரிகள் அவ்வழி.
எம்.ஜி.ஆரை பட்டா போட்டுக் கொள்ளத் துடிப்பவர்கள் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். #எதுவும்_தடையல்ல #சீரமைப்போம்_தமிழகத்தை
கூடிக் குறைவது, குறைந்து கூடுவது அன்றாட தங்க விலை. கூடிக்கொண்டு மட்டுமே போவது அத்தியாவசியமான கியாஸ் விலை. விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசுக்குத் திட்டம் இருக்குமோ?
ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே தேர்வு, ஒரே மதம், ஒரே இந்தி, ஒரே சப்பாத்தி, ஒரே ஜிப்பா எனும் வரிசையில் ஒளிந்திருக்கும் உள்ளக்கிடக்கை ’ஒரே பிரதமர்’.
எங்கெல்லாம் ‘ஒரே’ வருகிறதோ அங்கெல்லாம் சர்வாதிகாரமும் ஒடுக்குமுறையும் தலையெடுத்து விடும் என்பதே வரலாறு.
சம நீதியும், சமூக நீதியும் இல்லாத, ஏற்றத்தாழ்வு சமூகத்தில் ‘ஒரே’ என்று சொல்வதே பெரும் அநீதி!