நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது
நடிகை நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கம்.
படக்குழுவினரிடம் “ஜனவரி 10 க்குள் டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து விடுங்கள்” என்று ரஜினி கேட்டுக்கொண்டிருக்கிறாராம் .
மே மாதம் தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு இருப்பதால் அவ்வாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
டிசம்பர் கடைசியில் கட்சி பற்றிய அறிவிப்புகளை தெரிவித்து விட்டு ஜனவரியில் கட்சியை தொடங்கப்போவதாக ரஜினி முன்னரே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.