“ஜனவரியில் சிலம்பரசனின் மாநாடு ஷூட்டிங் முடிவடைகிறது. அடுத்த படத்தின் ஷூட்டிங் பிப்ரவரியில் ஆரம்பம். அது யாருடைய படம் என்பதை விரைவில் அறிவிப்பார்கள்” என்கிறார் சகலகலாவல்லவன் டி.ராஜேந்தர்.
நாலைந்து கதைகள் கேட்டிருக்கிறார் .அதை எதை முடிவு செய்யப்போகிறாரோ எஸ்.டி.ஆர்!
“பொங்கலுக்கு ஈஸ்வரன் ரிலீஸ் ? மாஸ்டருக்கு போட்டியா?”
“அப்படியெல்லாம் இல்லை. ஈஸ்வரன் பூஜை போட்டபோதே பொங்கல் ரிலீஸ் என்றுதான் சொன்னார்கள். அதனால் யாருடைய படத்துக்கும் போட்டியில்லை. நீங்களாக கற்பனை செய்யாதீர்கள்.
ஈஸ்வரன்படப்பிடிப்பு 36 நாளில் நடந்து முடிந்தது. என்றாலும் தினமும் ஒன்றரை கால்ஷீட் வீதம் நடித்து கொடுத்திருக்கிறார் சிலம்பு. அதையெல்லாம் சொல்லமாட்டீர்கள். அது சரி காய்த்த மரத்தில்தானே கல்லடி விழும்!” என்கிறார் டிஆர் .!