மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தில் கடுமையுடன் அதிமுக அரசாங்கத்தை சாடி வருகிறார்.
அவ்வப்போது லஞ்ச ஊழல் பட்டியலையும் வெளியிட்டு வருகிறார்.
இதனால் ஜெயகுமார் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் குறி வைத்து கமல்ஹாசனை காய்ச்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கமல் சளைக்கவில்லை.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.பாடிய பாடல்களை வைத்தே அவர்களை சாய்த்துக் கொண்டிருக்கிறார்.
தற்போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் லஞ்ச ஊழல் பட்டியலை வெளியிட்டிருக்கிறார் .பொது மக்கள் அன்றாடம் சந்திக்கிற லஞ்சப்பட்டியல்தான் அது .
பெரிய இடம்,உயர் அதிகார வட்டம் என அடுத்தடுத்து பட்டியல் வரும் போலிருக்கிறது
“பிறப்பு முதல் இறப்பு வரையிலான சான்றிதழ்களுக்கும், சேவைகளுக்கும் தமிழகம் முழுக்க நடைமுறையில் இருக்கும் லஞ்சப் பட்டியல் இது. மறைக்க முடியுமா? மறுக்க முடியுமா? மறக்க முடியுமா? #நான்_கேட்பேன்”என்கிறார் கமல்
